பக்கம் எண் :

இவ

 

       சப்பாணிப் பருவம்

351

    இவ்வாறான நுண்மாண் நுழைபுலனைச் சேக்கிழார் பெரிதும் பெற்றவர்.  அதற்கு ஓர் உதாரணத்தைக்காட்டி உறுதிப்படுத்துவோமாக.

    வள்ளுவப் பெருந்தகையார் இல்லறத்தானுக்குரிய பண்புகளைக் கூறிக் கொண்டு வருகையில்,

    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
     ஐம்புலத் தாறுஒம்பல் தலை”

என்பதும் ஆகும்.

    இக்குறட்பாவிற்கு உரை கூற வந்த பரிமேலழகர் “பிதிரர், தேவர், விருந்தினர் சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்” என்று எழுதியுள்ளனர்.  இதற்குமேல் விளக்கம் கூறும்போது, பிதிரர் ஆவார், படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுள்சாதி ; அவர்க்கிடம் தென்திசை ஆதலின், தென்புலத்தார் என்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  இதனால், தென்புலத்தார் ஆவார் பிதிரர் என்பது பெற்றாம்.  இனிச் சேக்கிழார் பெருமானார் தமது நுண்மாண்நுழை புலனால் தென்புலத்தார் என்பதற்கு என்ன பொருள் கண்டார் என்பதை அறிவோமாக.

    சேக்கிழார், சோழ நாட்டின், சிறப்பினைச் சிறப்பித்துக் கொண்டு வருங்கால், குடிமக்களின் இயல்பைக் கூறும்போது,

        அரசுகொள் கடன்கள் ஆற்றி
            மிகுதிகொண் டறங்கள் பேணிப்
        பரவரும் கடவுள் போற்றிக்
            குரவரும் விருந்தும் பண்பின்
        விரவிய கிளையும் தாங்கி
            விளங்கிய குடிகள் ஓங்கி
        வரைபுரை மாடம் நீடி
            மலர்ந்துள பதிகள் எங்கும்

என்று பாடியுள்ளனர்.  இப்பாடலில் சேக்கிழார் “பொய்யா மொழியாரின் பொன் மொழியாகிய “தென்புலத்தார்,