பக்கம் எண் :

என

 

       சப்பாணிப் பருவம

353

என்ற சிலப்பதிகார அடிகளைக் காண்க.  இதனால் இல்லறத்தார் இவர்களை ஓம்பலும் தலையாய கடன் என்பதை இனிதின் பெற்றாம்.  ஈண்டுத் துறவோர் குரவர் அல்லரோ? இவ்வரிய குறிப்பினை அன்றோ சேக்கிழார் தமது நுண்ணறிவுத் திறனால் குரவர் என்ற சொல்லில் குறிப்பாராயினர்.

    புனிதவதியார் கணவன் பரமதத்தன், அம்மையாரைத் தணந்து, மதுரைபுக்கு வேறு ஒருத்தியையும் மணந்து மகவையும் பெற்று வாழலானான்.  இதனை அறிந்த அம்மையார், அவன் இருக்கும் ஆலவாயைத் தம் சுற்றத்துடன் அணைந்தனர்.  இஃது அறிந்த பரமதத்தன் பழம், பூவுடன் தன் இரண்டாம் மனைவி மகளுடன் வந்து அம்மையார் காலில் விழுந்தனன்.

    கணவன் தன் மனையாள் காலில் விழுவது புறத்துக் கிடையாது ;  அகத்து உண்டு.  அதாவது பள்ளி அறையில் ஊடல் கொண்டபோது, மனைவி காலில் கணவன் விழுந்து வேண்டுவன்.  இதனைத் துறைமங்கலம் சிவப்பிரகாசரும் தம் கற்பனை மேதைக் கிணங்க,

        ஆதி பகவன் தனதூடல்
            தணிப்பான் பணிய அவ்விறைவன்
        பாதம் இறைஞ்சும் அதற்கும்நெற்றிப்
            பகையும் அல்குல் பகையுமாம்
        சீத மதியும் அரவும்விழும்
            செயற்கும் உவகை செயாமல்அலை
        மாது பணியும் அதற்குமனம்
            மகிழும் உமையை வணங்குவாம்

என்று பாடியுள்ளார்.  இங்ஙனம் தலைவியின் உயர்வினையும் தலைவன் தாழ்வினையும் குறித்து இலக்கணமும் எடுத்து இயம்புகிறது.  ஒல்காப் புலமைத் தொல்காப்பியனார்,

        மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
        நினையும் காலைப் புலவியுள் உரிய