ந
நிலையில் திரியாது
அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்
பெரிது
பயன் தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது
காலத்தினால் செய்த
நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்
பெரிது
என்று எழுதிக் கொடுத்தனர். இவ்வாறான சேக்கிழாரின் நுண்ணறிவுத் திறனை வியந்த கம்பர் தமது திருக்கை வழக்கு என்னும் நூலில்,
காவலன், மண்ணில்
கடலில் மலையில் பெரியதென
எண்ணியஎழு திக்கொடுத்த
ஏற்றக்கை
என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.
இவையெல்லாம் சேக்கிழார் பெருமானார் அறிவின் மேதையைக் குறிக்கும்.
இன்னோரன்ன அறிவு
இருந்தும் ஒழுக்கம் இன்றேல் பயன் இல்லை. ஆதலால் சேக்கிழார் ஒழுக்கத்திலும் தலை சிறந்து
விளங்கினர். ‘என் உரை சிறிது’ “வீரம் என்னால் விளம்பும் தகையதோ” “ஈண்டு வாழ்த்துகேன்”
“என் அறிந்து ஏத்துகேன்” என்பன போன்ற அவரது வாக்குகள் அவரதுஒழுக்க மேம்பாட்டை உணர்த்தும்
நிலையைக் காண்க.
இத்தகைய பண்புடையவர்களையே
மன்னர்கள தழுவிக் கொள்ளுதல் வேண்டும் என்பார் “இவை உடையார் தழீஇ” என்றனர்.
“தான் அறிந்து மூத்த
அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து
கொளல்
அரியவற்றுள் எல்லாம்
அரிதே பெரியாரைப்
பேணித் தமராக்
கொளல்
தம்மின் பெரியார்
தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம்
தலை”
|