பக்கம் எண் :

என

356

       சப்பாணிப் பருவம

 

என்று வள்ளுவரும், மன்னன் பெரியாரது துணைக் கோடலை வற்புறுத்தி இருத்தலையும் ஈண்டுக் காண்க.

    தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
    கெடுக்கும் தகைமை யவர்

என்று கூறிப்போந்தார்.

    மன்னர் தாராளச் சிந்தையராய் இருத்தல் வேண்டும்.  இவர் தம் கொடைத் திறன் கைம்மாறு கருதா மழை போன்று கொடுக்கும் கொடைத் திறனாக இருத்தல் முக்கியமானது.  “ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்” என்று கம்பரும்  கூறுதல் காண்க.  “தருகை நீண்ட தயரதன்” என்பது “தனியன்.” “தருமத்தின் கவசத்தான்” என்று இராமாயணமும் “பருவக் கொண்மூப்படி எனப் பாவலர்க்கு உரிமையின் உதவி” என்று திருமுகப் பாசுரமும், “காரின் மலிந்த கொடை” என்று பெரிய புராணமும் கூறுதல் காண்க.  “ஈண்டுக் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு” என்னும் குறள் நினைவுக்கு வரும் முறையில், “மாறு கருதா மழைநிகர் கொடைத் திறன்” என்னும் தொடர் அமைந்திருத்தலைக் காண்க.

    அரசர்கள் தம் சேனையைப் பெருக்குதலும் கடனாம்.  வள்ளுவர்,

    “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
     வகுத்தலும் வல்லது அரது”

என்று கூறியதற்கு உரை கண்ட பரிமேலழகர், வகுத்தல் என்பதற்கு விளக்கம் கூறுங்கால், “யானை, குதிரை, படை, நாடு, அரண் என்றிவற்றிற்கும்” என்று கூறியுள்ளார்.

    மணக்குடவர், “யானை, குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையியற்றை உண்டாக்குதல்” என்றனர்.  பரிப்பெருமாள், “யானை, குதிரை, படைக்குக் கொடுத்து