பக்கம் எண் :

ஆக

366

       சப்பாணிப் பருவம

 

ஆக்குறும் செயல தொன்றே அயன்தனக் காக்கலோடும்
காக்குறும் செயலிரண்டும் கண்ணனுக் காக்கல் காத்தல்
போக்குதல் என்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு
நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகுகேசன்

என்றும் பிரபுலிங்க லீலை மூலம் அறியலாம்.

    மேழி அளவாப் பெருமை வாய்ந்தது என்பது முற்றிலும் உண்மை.  இதன் சிறப்பைக் கூறுவந்த கம்பர்,

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழி பேரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவ தல்லாம் வேறொன்றால் விளையாவே

என்றும்,

    தார்க்கோலின் மாண்பு இன்னது என்பதைக் கூறவந்த இடத்தும் கம்பர், (தார்க்கோல் தாற்றுக்கோல் என்றும் கூறப்படும்,

        வெங்கோபக் கலிகடந்த
            வேளாளர் விளைவயலுள்
        பைங்கோல முடிமுதிருந்தப்
            பார்வேந்தர் முடிதிருந்தும்
        பைங்கோதைக் கடல்தானைப்
            போர்வேந்தர் நடத்துபெருஞ்
        செங்கோலை நடத்துங்கோல்
            ஏர்அடிக்கும் சிறுகோலே

என்று அறிவித்துள்ளனர்.  சிறு கோல் ஈண்டுத்தாற்றுக்கோல்

    “நல்லார் ஒருவர் ஓளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது உண்மை மொழி.  உபகாரச் சிந்தையுடைய வேளாளர் நல்லவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.  ஆகவே, அவர்கள் மழைப் பொழிவுக்கும் காரணராய் இருக்கின்றனர்.  இவர்க்கும் மழைக்கும்