New Page 1
தொடர்பு இருத்தலால்தான்
“கொண்டல் கட்டி வேளாளர்” என்றும் இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இன்னோரன்ன காரணங்களால்தான்
“மழை வளனும் சிறப்ப” என்றனர்.
இவற்றை எல்லாம்
ஈண்டு உட்கொண்டே திரு பிள்ளை அவர்கள், “அளவாப் பெருமை வாய்ந்த மேழிதார்க் கோலொடும் தொடும்
செங்கைத் தலம்” என்றனர்.
(33)
3. மேவாத பாயுடீஇத்
தலைமயிர் பறித்துழறல்
மேயசமயப்
பாழ்ங்குழி
வீழ்ந்தவர்முன் அச்சமய
கண்டனம் பேசிஅது
விடஆற்று திருவாயினின்
றோவாத பிரதாபம்
ஒருகதிர் எனத்தோன்றி
உள்ளகோ கனகம்எல்லாம்
உறமலர்த் திட
அவைகை ஒப்பாயி னோம்என்
றுறப்பொலிதல்
தேறுபன்னார்
ஆவாத மியம்என
அபயம்நல்கி உண்மைநிலை
அருளும்கை நின்றெழுபுகழ்
ஆலோன் எனத்தோன்றி
எல்லாம் குவித்ததென்
றான்றோர் எடுத்துரைக்கும்
தாவாத ஒளிகிளர்நின்
அங்கைத் தலம்கொண்டொர்
சப்பாணி கொட்டிஅருளே
தண்டமிழ்க் குன்றையாம்
குன்றுதித் தெழுபானு
சப்பாணி கொட்டியருளே
[அ. சொ.]
மேவாத-உடலில் பொருந்தாத, உடீஇ-உடுத்து, உழறல்-திரிதல், மேய-பொருந்திய, ஓவாத-நீங்காத,
பிரதாபம்-புகழ், மேம்பாட்டுப் பொலிவு, ஒரு கதிர்-ஒப்பற்ற சூரியன், உள்ள கோகனகம்-மனமாகிய
தாமரைகள், உற-நன்றாக, அவைகை-அப்படிப்பட்டவகையில், பொலிதல்-விளங்குதல், தேறுபு-தேர்ந்து,
அன்னார்-
|