பக்கம் எண் :

368

       சப்பாணிப் பருவம

 

பிறசமயத்தவர், ஆஆ இரக்கக் குறிப்புக் காட்டும் சொல்.  தமியம்-யாரும் அற்றுள்ளோம், நல்கி-தந்து? ஆலோன்-சந்திரன், ஆன்றோர்-அறிவால் நிறைந்த பெரியோர்கள், தாவாத-குறையாத, கிளர்-விளங்கும், அங்கைத்தலம்-அழகிய கை.

    விளக்கம் :  முதலடி சமணர்களைப்பற்றி அறிவிக்கின்றது.  சமணர்கள் பாய் உடுத்தும், தலைமயிர் மறித்தும் உழல்வர் என்பதை நம் தேவாரம் நன்கு எடுத்து இயம்புகிறது.  “தலையெலாம் பறிக்கும் சமண்” “முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்தலை பறிக்கும் தன்மையர்கள்” “பறிதலைக் கையர் பாய் உடுப்பார்கள்” என்றும் கூறியவற்றைக் காண்க.  உடுக்கும் உடைபோலப் பாய் பயன்படாமையின், “ மேவாத (உடலில் பொருந்தாத) பாய்” என்றனர் சமணப் பாழ்ங்குழி என்பதைச் சேக்கிழார், “பொய்வாய்மை பெருக்கியபுன் சமயப்பொறியில் சமணீசர் புறத்துறையாம் அவ்வாழ்குழியின் கண்விழுந்தெழுமாறு அறியாது மயங்கி அவம்புரிவேன்” என்று அப்பர் வாக்கில் வைத்துப் பாடலைக் காண்க.

    சேக்கிழார் பெருமானார் சமண சமயத்தைப் பாழ்ங்குழி என்றதற்குக் காரணம் உண்டு.  கொல்லாமை மறைந்தொழுகும் அமண் சமயம் ஆதலாலும், பொய்யொழுகும் அமண் குண்டர் ஆதலாலும் என்க.

    இச் சமணர் தம் மதக் கொள்கைக்கேற்ற குணநலம் படைத்தவர் அல்லர் என்பது திருஞான சம்பந்தர் வாக்காலும் தெரிய வருகிறது.  “கழிகரைப் படுமீன் கவர்வார் சமண்” என்றும், “கழி அருகு பள்ளி இடமாக அடுமீன்கள் கவர்வார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதைக் காணவும், இதனால் அச் சமண், பாழ்ங்குழிச் சமயம் அன்றோ? சேக்கிழார், “தேற்றமில் சமண்” என்றும், “பழுது செய்த அமண்” என்றும் பலபடி கூறிச் சமய கண்டனம் செய்துள்ளனர்.