New Page 1
சேக்கிழார், சமண
சமய மறுப்பாகப் பாடிய பாடல் குறிப்புக்கள், அவர் நூலில் பல உண்டு. அவற்றினை நாயன்மார்
வாழ்க்கைக் குறிப்பில் எடுத்து மொழிந்துள்ளார். திலகவதியார் தமது இளவல் சமண் சமயத்திலிருந்து
விலக இறைவனிடம் வேண்டிய வேண்டுகோளை, “அடியேன்பின் வந்தவனை, ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும்
எடுத்தாள வேண்டும்” எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனர் என்றும் பாடியுள்ளனர். இவ்வாறு
பல இடங்களில் கூறிச் செல்வர்.
சேக்கிழார்
பெருமானார் ஞான சூரியனாக விளங்கலின், அன்பர்களின் அகத்தாமரைகள் எல்லாம் அலர்வன ஆயின.
ஆதலின், “கதிர் எனத் தோன்றி *** கோகனகம் எல்லாம் மலர்த்திட” என்றனர்.
சேக்கிழார்
பெருமானாராம் சூரியனைக் கண்டு உளம், மலர்ந்து அன்பர் உற்ற நிலைகளைச் சேக்கிழார் புராணத்துள்
நன்கு காணலாம்.
வாரணத்தில் இவரைவரக்
கண்டதிரு வீதி
மறுகுதொறும் தூய்மைசெய்து
வாழைகளும் நாட்டிப்
பூரணகும் பமும்அமைத்துப்
பொரியும்மிகத் தூவிப்
பொன்னரிமா லையும்நறும்பூ
மாலைகளும் தூக்கித்
தோரணங்கள் நிரைத்துவிரை
நறுந்தூபம் ஏந்திச்
சுடர்விளக்கும் ஏற்றிஅணி
மணிவிளக்கும் ஏந்தி
ஆரணங்கள் விரித்தோதி
மாமறையோர் எதிர்கொண்டு
அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார்
அரம்பையர்கள் எல்
( லாம்
என்றும்,
மின்மழை பெய்தது
மேக ஒழுங்குகள்
விண்ணவர் கற்பக
விரைசேர்பூ
நன்மழை பெய்தனர்
சேவையர் காவலர்
நாவலர் இன்புற
நாவாரச்
சொன்மழை பெய்தனர்
இரவலர் மிடிகெட
அள்ளி முகந்தெதிர்
சோழேசன்
பொன்மழை பெய்தனன்
உருகிய நெஞ்சொடு
கண்மழை அன்பர்
பொழிந்தார்கள்
|