பக்கம் எண் :

என

370

       சப்பாணிப் பருவம

 

என்றும் கூறப்பட்டதனால், சூரியனைக் கண்ட தாமரை போல் அன்பர்கள் மனம் மலர்ந்து தம் மகிழ்வைக் காட்டியதை அறிகிறோம்.

    சந்திரனைக் கண்டபோது.  தாமரை குவியும்.  அது போலச் சேக்கிழாராம் சந்திரனைக் கண்டபோது தாமரை போன்ற கைகளைக் குவித்து வணங்கியதையும் அப் புராணத்துள் காண்கிறோம்.

    கண்ட போதுள மகிழ்ந்து தன்னைஅறி
        யாது கைகள்தலை மீதுறக்
    கொண்ட வேடம்அரன் அடியர் வேடம்இது
        குறைவி லாததவ வேடம்என்
    றண்ட வாணர்திரு அருளை உன்னிஅவர்
        அடிமை கொண்டபெரு மையைநினைந்து
    எண்த யங்கு அரசர் ஏறு சேவையர்
        குலாதி பாதுகை இறைஞ்சினான்

என அரசர் கைகுவித்து வணங்கியதையும்,

    மெய்யுள சிவசா தனுமும் வெளிப்பட
        வெண்ணீ றெழுதிய கண்ணேறும்
    கையும் திகழ்மணி கண்டமும் ஒளிதரு
        கவளிகை யும்புத் தகஏடும்
    நையும் திருவுளம் அழியும் தொறும்அர
        கரஎனும் நாமமும் நாமெல்லாம்
    உய்யும் படிஅருள் கருணையும் அழகிதெ
        னத்தொழு தனர்உல கவர்எல்லாம்

என்று மக்கள் கைகுவித்துத் தொழுததையும் பார்க்கின்றோம்.  இக் காரணங்களால்தாம் திரு பிள்ளை அவர்கள் சேக்கிழாரைச் சூரியனாகவும், சந்திரனாகவும் நமக்குக் காட்டினர்.  அன்றோர் ஈண்டு உமாபதி சிவாசாரியார், சிவஞான முனிவர் முதலானோர்.

    சேக்கிழார் திருக்கரம், திருத்தொண்டர் புராணத்தைஎழுதியதால், “தாவாத ஒளிகிளர் நின் அங்கைத்தலம்” என்றனர்.

    புகழை வெண்ணிறமாகக் கூறல் புலவர் மரபு ஆதலின், சூரியனை உவமை காட்டினர்.  இவ்வாறு புகழ் வெண்ணிறம் என்பதைச் சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில்,