தன
தனது கீர்த்தியும்
திறல்பிர தாபமும் தரைமேல்
அனல்செய் கோபமும் முல்லையும்என எங்கும் அமைத்துப்
புனித மாம்அவை தம்மையும் பொதிந்துகொண் டன்னப்
பனிவி சும்பினில் சிவந்து
வெண்ணிறம் படைத்த தன்றே
என்று பாடியிருத்தலை அறிக.
கம்பரும் நிலாஒளியைப் புகழ் போன்றது என்று பாடியதை,
வண்ண மாலைக் கைபரப்பி
உலகை வளைந்த
இருள்எல்லாம்
உண்ண எண்ணித்
தண்மதியத்
துதயத் தெழுந்த
நிலாக்கற்றை
விண்ணும் மண்ணும்
திசை அனைத்தும்
விழுங்கிக்
கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணெய்ச்
சடையன்தன்
புகழ்போல் எங்கும் பரந்துளதால்
என்ற பாட்டில் காண்க.
(34)
4. துருமமலர்
கொய்துநீர் ஆடிநீ றிட்டுநனி
தூயகண் இருந்துநேரே
துலங்குமொரு
குறியில்ஆ வாகனம்எ ணுதலோடு
தோன்றிடச் செய்வதன்று
பெருமஅடி யேங்களைப்
புரவென்று தாழ்பவர்
பெருஞ்செல்வம்
எய்திஐய
பிறங்குநா ராணயஉ
பநிடதம் உரைத்தபடி
பெற்றருள்தி
இவர்வணக்கம்
கருமம்முதல் எம்மலமும்
நீத்தின்பம் எய்தக்
கடைக்கணித் திடுதிஎன்று
கனிந்துவேண் டுவதன்று
சிறுவருத் தமும்இலாக்
காரியம் அவாவிநின்றோம்
தருமசின கரமாம்
கரம்குவித் தையஒரு
சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ்க் குன்றையாம்
குன்றுதித் தெழுபானு
சப்பாணி கொட்டி
யருளே
|