New Page 1
[அ. சொ.]
துருமம்-மரம், துரும மலர்-மரக்கிளையில் பூக்கும் மலர், நீறிட்டு-திருநீறு தரித்து, நனி-மிகவும்,
தூயகண்-பரிசுத்தமான இடத்தில், துலங்கும்-விளங்கும், குறி-இலிங்கமாகிய குறியில், ஆவாகனம்-குறியில்
வந்தருள மந்திரத்தால் இறைவனை அழைத்தல், பெரும-பெருமையில் சிறந்தவரே, புரவு-காப்பாற்றுக,
பிறங்கு-விளங்கும், நாராயண உபநிடதம்-பாஞ்சராத்திரம் என்னும் உபநிடதம், எம்மலமும்-ஆணவம்,
மாயை என்னும் மற்றைய இருமலங்களும், நீத்து-ஒழித்து, எய்த-அடைய, கடைக்கணித்து-கடைக்கண்
பார்வை செய்து, அவாவி-விரும்பி, தருமசினகரமாம் கரம்-அறக்கோயிலாம் கை.
விளக்கம் :
உபநிடதங்கள் நூற்றுஎட்டு. ஆவற்றுள் ஒன்று நாராயணீ உபநிடதம், காலையில் எழுந்து நீராடி, திரு
நீறிட்டு, மலர் கொய்து ஒடிவடிவிலே வழிபடு கடவுளை அழைத்துப் பூசனை செய்து வேண்டியதைப் பெற வேண்டுவது
நம்மனோர் கடமை. அப்பர் பெருமானாரும் தம் நெஞ்சுக்கு அறிவுறுத்தும்போது,
நிலைபெறுமாறு எண்ணுதியேல்
நெஞ்சே நீவா
நித்தலும்எம்
பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன்
அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை
புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக்
கூத்தும் ஆடிச்
சங்கரா சயசய
போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடைஎம்
ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே
அலரா நில்லே
என்றனர்.
கருமம் முதல் எம்மலமும்
என்றது ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் ஆகும். இவற்றோடு, மாயேயம், திரோதானம்
இரண்டையும் சேர்த்து மலம் ஐந்து என்னும் மரபும் உண்டு. முதல் மூன்று குணங்களின் தன்மை இன்னது
என்பதை இருபா இருபஃது.
|