New Page 1
கோட்டம், பையூர்க்
கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்தூர்க் கோட்டம்,
செம்பூர்க் கோட்டம், ஆம்பூர்க் கோட்டம், வெண்குன்றக் கோட்டம், பல்குன்றக் கோட்டம்,
இலங்காட்டுக் கோட்டம், கலியூர்க் கோட்டம், செங்கரைக் கோட்டம், படுவூர்க் கோட்டம்,
குடிகூர்க் கோட்டம், குன்றவட்ட கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலூர்க் கோட்டம், சேத்தூர்க்
கோட்டம், புலியூர்க் கோட்டம் என்பன. இப்புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்தவர் சேக்கிழார்.
கோட்டம் என்பது நிலப் பிரிவில் ஒரு பகுதிக்கும், கோணலுக்கும் பொருளாகும் சொல்லாதலின்,
ஆசிரியர் அழகுபடுத்திக் கூறும் முறையில் சேக்கிழாரை நோக்கி, நீர் புலியூர்க் கோட்டம் தவிர்த்து
வேறு கோட்டம், (கோணல் இல்லாதவர் என்பதை ஒரு கோட்டமும் உறல் இல்லாய்” என்றனர். நாட்டில்
குடிகள் செறிந்துவாழ வேண்டும்) என்பர் வள்ளுவரும்.
தள்ளா விளையுளும்
தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது
நாடு
என்று கூறிச் சென்றார்.
இந்தப் பண்பு குன்றத்தூரில் உண்டு என்பார் “குடிகள் நெருங்கும் குன்றத்தூரன்” என்றனர்.
“தாழ்வில் திருவினர் தக்கோர் சாலச் செறிந்தது தொண்டைநாடு” என்று தணிகைப் புராணம் கூறுகிறது.
இருபுனல் வாய்ந்த
மலைவரு புனலும்
இடவிய நகர்களும்
உடைத்தாய்ப்
பெருகஎப் பொருளும் ஒழிவற விளக்கும்
பெருங்குடி களும்கலம்
காலால்
பொருள்பல ஈட்டம்
செல்வரும் மறையோர்
புரைஅறு தவத்தினர்
துறவோர்
மருளறு கலைஞர் ஆதியோர்
பலரும்
மன்னிவாழ்ந் திருப்பது
நாடு
என்ற விநாயக புராணம்
கூறுதலையும் காண்க.
(39)
|