New Page 2
(பஞ்சமுத்திரை-பத்மம்,
சங்கம், மகரம்), சக்கரம், தண்டம் ஆகிய பஞ்ச ரேகைகள்) என்ற இடத்து இவர் தம் ரேகை சாஸ்திர
ஞானத்தையும்.
அடிமுதல் உபானம் ஆதி
ஆகிய படைகள் எல்லாம்
வடுவுறும் தொழில்கள்
முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும்
முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூடக்
கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்
என்ற இடத்து இவரது
கோயில் கட்டட நூல் ஞானத்தையும் உணரலாம்.
திருஞான சம்பந்தர்
தாம்பாடிய பதிகங்களில் ஒரு போக்கைச் சிறப்பு முறையில் கைக் கொண்டுள்ளார். அதாவது, ஒவ்வொரு
பதிகத்தின் எட்டாவது பாட்டில், இராவணனது செருக்கை இறைவன் அடக்கியதையும், ஒன்பதாவது பாடலில்,
அயனும் அரியும் ஆகிய இருவரும் இறைவனது திருமுடி, திருவடிகளைக் காண இயலாது விழித்ததையும், பத்தாவது
பாடலில், சமண பௌத்த சமயங்களின் போக்கையும் இழிவையும் எடுத்துக் கூறுவதையும், மேற்கொண்ட
போக்காகும்.
இவ்வாறே அப்பர்
பெருமானாரும், தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றிலும் இராவணன் கைலை மலையைத் தூக்க முயன்று
துன்புற்றதையும் குறிப்பிட்டுள்ளார். (சிற்சில பதிகங்களில் இப்போக்கு இல்லை என்றாலும், பெரிதும்,
குறிப்பிட்டுப் பேசிய பதிகங்களே உள.)
இங்ஙனம் இவ்விரு சைவ
சமைய ஆசிரியர்கள் இம்முறையினை ஏன் பின்பற்றினர் என்பதை நம் சேக்கிழார் பெருமானார் தமது
ஞான உணர்வினால் உணர்ந்து, அதற்குப் பின் வரும் காரணங்களைக் காட்டினார்.
மண்ணுலகில்
வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணல்அவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்
|