மரகதம
மரகதமலை என்பது திருவீங்கோய்
மலைத்தலமாகும். இதனைத் திருவிங்கநாதமலை என்றும் கூறுவர். குழித்தலை ஸ்டேஷனிலிருந்து வடக்கேயுள்ள
அகண்ட காவிரியைக் கடந்து முசிரியை அடைந்து அங்கிருந்து மூன்று மைல் சென்றால், அதனை அடையலாம்.
கருடப்பச்சை ஒளியுடன் குன்றத்தூர் விளங்கலின், அது மரகதமலையாம் திருவீங்கோய் மலைத்தலம்போல்
விளங்குகிறது.
கைலயங்கிரி என்பது
வெள்ளிமலை. இது நொடித்தான் மலை என்றும் கூறப்படும். கைலங்கிரி வெள்ளை வெளேறென
இருக்கின்றது என்பதைச் சேக்கிழார்,
நாய கன்கழல் சேவிக்க
நான்முகன்
மேய காலம் இலாமையின்
மீண்டவன்
தூய மால்வரைச்
சோதியில் மூழ்கியொன்
றாய அன்னம் காணா
தயர்க்குமால்
என்று கூறுவது கொண்டு
உணரலாம்.
முத்தங்களைப் பற்றிய
சிறப்புக் குறிப்புகள்-
திருநாகேச்சுரம் என்பது
திருநாகேச்சுவரம் இரயில் அடிக்குத் தெற்கே முக்கால் கல் தொலைவில் உள்ளது. இதனைச் சம்பந்தர்,
அப்பர், சுந்தரர் மூவரும், பாடியுள்ளர். ஆறு பதிகங்கள் இப்பதிக்கு உண்டு. நாகராசனும் ஆதிசேடனும்
பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. சூரியன், சந்திரனும் பூசித்துள்ளனர். இதனை நாயிறும்
திங்களும் கூடி வந்தாடு நாகேச்சுரம்” என்று சம்பந்தர் பாடலும் அறிவிக்கிறது. இத்தலம் சண்பகாரண்யம்
எனவும் வழங்கப் பெறும். இறைவர் சண்பகாரண்யர், இறைவியார் குன்றமுலை நாயகியார். ஈண்டுள
தீர்த்தம் சூரிய புஷ்கரணி. பெரிய கோயில். நாற்புறமும் கோபுரத்தைக் கொண்டது. இங்குச்
சங்கநிதி, பதுமநிதி, விக்கிரங்களைக் காணலாம். சுந்தரர் பரவையாருடன் காட்சி
அளிக்கிறார். சேக்கிழார் பெருமானார்க்கு ஆன்மார்த்த தலமாகும். இது குறித்தே குன்றத்தூரில்
இப்பெருமனார் ஒரு தலத்தையும் நிறுவினர்.
|