பக்கம் எண் :

இந  

414

       முத்தப் பருவம்

 

    இந்த உண்மையை நன்கு உணர்ந்த மணிமொழியார்,
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
    தடந்திரையால் ஏற்றுண்டு பற்றுஒன்று இன்றிக்
கனியின்நேர் துவர்வாயார் என்னும் காலால்
    கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு
இனிஎன்ே்ன உய்யுமாறு என்றென் றெண்ணி
    அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல்அந்தம் இல்லா மல்லல்
    கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே

என்றருளிப் போந்தார்.

    மெய்யடியார்கள் வெப்பம் மிகுந்த பிறவியை நீக்கிப் பேர் இன்பம் பெற விழைவர் என்பது உண்மை.  இதனை அருணகிரியார் வாக்காகிய,

        குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
            குலவிய தோலத் தியினூடே
        குருதியி லேசுக் கிலமது கூடிக்
            குவலயம் வானப் பொருகாலாய்
        உடல்எழு மாயப் பிறவியில் ஆவித்
            துறுபிணி நோயுற் றுழலாதே
        உரைஅடி யேனுக் கொளிமிகு நீபத்
            துனதிரு தாளைத் தரவேணும்

என்பது கொண்டும் தெளியலாம்.  இதனால்தான் ஈண்டுத் திருபிள்ளை அவர்கள், “உருப்பம் சாரும் பிறந்தைமரீஇ உறமேற் போயும் கீழ்இழிந்தும் உழறல் ஆய பெருந்தாகம் ஒருங்கு மாய்த்து இன்பு ஒருங்கு அடைய விருப்பம் சாரும் மெய் அடியார்” என்றனர்.

    தொகையடியார் ஒன்பதின்மர்கள்.  தில்லைவாழ் அந்தணர்கள், பொய்யடிமை இல்லாத புலவர்கள், பத்தராய்ப் பணிவார்கள். பரமனையே பாடுவார்கள், சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவர்கள், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார்கள், முழுநீறு பூசிய முனிவர்கள், அப்பாலும் அடிச்சார்ந்தார்கள்.  அறுபதின்மர் என்போர் சுந்தரர், அப்பர், சம்பந்தர் நீங்கலாகத் திருநீலகண்ட