ந
நாயனார் முதல், இசைஞானியார்
வரையில் உள்ள அறுபது தனியடியார்கள். மூவர் என்பார் அப்பர், சுந்தரர், சம்பந்தர். இவர்களும்
அடியவர்களே ஆயினும், சமய ஆசாரிய நிலையில் இருப்பவர்கள் ஆதலின், தனித்துப் பிரித்துக் கூறப்பட்டனர். இவ்வடியார்களின் சரித்திரங்கள் கேட்க கேட்கக் இனிப்பாய் இருத்தலின், “கருப்பஞ்சாறு” என்று
உவமை கூறி விளக்கினார்.
சேக்கிழார்
பெருமானார்க்கு இம்மூவர் சரிதங்களைப் பெரு விருப்பத்துடன் கருப்பஞ்சாறுபோல் இனிக்க இனிக்கச்
செப்பினர் என்பதை அவர்கள் வரலாற்றைப் பல நூறு கவிகளில் பாடி இருப்பது கொண்டு தெரிந்து
கொள்ளலாம். சேக்கிழார் பெருமானார்க்கு இம் மூவர் வரலாற்றில் இருந்த ஈடுபாடு எத்துணைத்து
என்பதைச் சுந்தரர், அப்பர், சம்பந்தர் வரலாறுகளில் முறையே,
வருமணக் கோலத்
தெங்கள்
வள்ளலார் தெள்ளும்
வாசத்
திருமணப் பந்தர்
முன்பு
சென்றுவெண்
சங்கம் எங்கும்
பெருமழைக் குலத்தின்
ஆர்ப்பப்
பரிமிசை இழிந்து
பேணும்
ஒருமணத் திறத்தின்
ஆங்கு
நிகழ்ந்தது
மொழிவேன் உய்ந்தேன்
என்றும்,
திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்
என்றும்,
வேதநெறி தழைத்தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயல்புகலித் திருஞான
சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்
என்றும் பாடியிருப்பதால்
அறியலாம்.
|