யுள்ளார் என்று வாதாடி
அதற்குச் சான்றாக, “தன்பெருஞ் செல்வமும்” என்னும் தொடரைக் காட்டி “ஈண்டுச் “செல்வம்” என்பது
புத்திரச் செல்வமே ஆகும்” என்று எடுத்துக் காட்டுவர். செல்வம் என்று புத்திரர்களைக் கூறுவது
மரபே யானாலும், ஈண்டு நம்பியாண்டார் நம்பிகளால் குறிப்பிடப்பட்ட பெருஞ் செல்வம் என்பது
புத்திரரை அன்று. இதனை அவர் பாடிக் காட்டியுள்ள செய்யுள் போக்கைக் கொண்டே உணரலாம்.
“தன்னையும் தன்துண்டமதிநுதலாளையும்” என இணைத்துக் கூறாது செல்வமும் எனப் பிரித்துக் காட்டி
இருப்பதை நோக்கவும். ஆகவே, செல்வமும் என்பது ஈண்டுப் பொருட் செல்வமே அன்றிப் புத்திரச்
செல்வம் அன்று. இதனை விளக்கவே பெருஞ் செல்வமும் என்று அடைகொடுத்துப் பேசினர். இன்னோரன்ன
காரணங்களால் நம்பியாண்டார் நம்பிகள் கருத்துத் தராசுத்தட்டில் ஏறியவர்கள் அமர்நீதி நாயனாரும்,
அவர்தம் மனைவியாருமே பொருள்களுமே என அறிதல்வேண்டும். சேக்கிழார் பெருமானார் நம்பியாண்டார்
நம்பிகள் பாடியுள்ள செய்யுளில் காணும் பெருஞ் செல்வமும் என்னும் தொடர்க்கு ஒருசிலர் புத்திரச்
செல்வம் என்று பொருள் கண்டு, மயங்கக் கூடும் என்பதை அறிந்தே தராசுத்தட்டில் ஏறியவர்கள் நாயனாரும்,
அவர்தம் மனைவியாரும், குழந்தையும் என்பதை ஒரு முறை மட்டும் குறிப்பிடாமல் இருமுறையும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தம் கருத்தை வலியுறுத்தவே “புதல்வன் தனையுடன் கொடு” என்றும் “மைந்தரும்,”
என்று பாடிக் காட்டினார்.
திருஞானசம்பந்தர்
சமணர்களைக் கழுவேறுமாறு செய்ததுஅவருக்கு மாசு அன்றோ என்று நம் சமயாசாரியருக்கும் குற்றம் கற்பிப்பார்
உணரும் வகையில்,
புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர்
இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகலிலாச் சமணர் செய்த
தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை
விலக்கிடா திருந்த வேலை