New Page 1
பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும் நற்கணத் தினில்ஒன் றானேன் நான்என்று நயந்து பாடி
என்றும்,
கண்ணப்ப நாயனார்
தம் கண்ணை இடந்து காளத்தியப்பர் கண்ணில் வைக்க முயன்றபோது, இறைவர் அவ்வாறு செய்ய உடன்படாது
உடனே, “நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப” என்று மூன்று
முறை நில் நில் நில் என்று நக்கீரர் தாம் பாடிய திருக் கண்ணப்ப தேவர் திருமறத்தில் பாடி
இருப்பதை உட்கொண்ட இவர்,
தங்கண்முன் இடக்கும்
கையைத்
தடுக்கமூன்
றடுக்கு நாக
கங்கணர் அமுத
வாக்குக்
கண்ணப்ப நிற்க
என்றும் பாடிக்கட்டியிருப்பனவற்றைப்
பார்க்குங்கால் மூல இலக்கியமே வேறாகாது பாடவல்லார் என்பதை நன்கு அறியலாம். இந்தக்
கருத்தையே “மூல இலக்கியமே வேறாகாது” என்றனர். இவ்வாறு பல சான்றுகளை எடுத்துக் காட்டலாம்.
இறைவர் தமக்குத் திருவருள்
செய்யத் தாம் பணி பல புரிந்தனர் என்பதற்குச் சான்றாக, அவர் குன்றத்தூரில் திருநாகேச்சுரர்
என்னும் பெயரால் திருத்தலம் அமைத்து வழிபட்டதே சான்றாகும். “இதனை நித்தன் உறை திருநாகேச்சுரத்தில்
அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்” என்று சேக்கிழார் புராணம் கூறுதல் ஈண்டு அறியும்போது,
“அல்லும்பகலும் அம்பலவர் அருள் தரற்குஆய அரும்பெரும் பணி செய்து’ ‘என்பது உண்மை என்பதை உணரலாம்.
அன்றி இந்த “அல்லும்*** பணிசெய்து” என்னும் தொடரை அடியார்க்கு அடையாக்கிப் பொருள் காணின்,
அடியார்கள் இம்முறையில் தொண்டு செய்து அருள் பெற்றதை அவ் அவர்தம்புராணத்துக் கண்டு தெளியலாம்.
|