பக்கம் எண் :

கந  

442

       முத்தப் பருவம்

    கந்தம் கமழ்மென்குழ லீர்இதுஎன்
        கலைவாள் மதியம் கனல்வான் எனைஇச்
    சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
        தடவும் கொடியீர் தவிரீர் தவரீர்
    வந்திங் குலவி நிலவும் விரையார்
        மலையா னிலமும் எரியாய் வருமால்
    அந்தண் புனலும் அரவும் விரவும்
        சடையான் அருள்பெற் றுடையார் அருளார்

    புலரும் படியன் றிரவென் அளவும்
        பொறையும் நிறையும் இறையும் தரியா
    உலரும் தனமும் மனமும் வினையேன்
        ஒருவன் அளவோ பெருவாழ் வுரையீர்
    பலரும் புரியும் துயர்தான் இதுவோ
        படைமன் மதனார் புடைநின் றகலார்
    அலரும் நிலவும் மலரும் முடியார்
        அருள்பெற் றுடையார் அவரோ அறியார்

    தேரும் கொடியும் மிடையும் மறுகில்
        திருவா ரூரில் நீரே அல்லால்
    ஆரென் துயரம் அறிவார் அடிகேள்
        அடியேன் அயரும் படியோ இதுதான்
    நீரும் பிறையும் பொறிவாள் அரவின்
        நிரையும் நிரைவெண் தலையின் புடையே
    ஊரும் சடையீர் விடைமேல் வருவீர்
        உமதன் பிலர்போல் யானோ உறுவேன்

இப்படல்களைப் போலப் பல பாடியிருப்பதால் ஈண்டு, திரு பிள்ளை அவர்கள் “கல்லும் கரையக் கவிபாடும் கனிவாய்” என்று பாராட்டிப் பாடியதன் சிறப்புப் புலனாகும்.

    சேக்கிழார் பெருமானார் அடியார்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி இருப்பதுபோல் எப்புலவர்களும் பாராட்டி இலர்.  இவ்வரிய உண்மையினை,

        ஒழியாப் பெருமைச் சடையனார்
            உரிமைச் செல்வத் திருமனையார்
        அழியாப் புரங்கள் எய்தழித்தார்
            ஆண்ட நம்பி தனைப்பயந்தார்