பக்கம் எண் :

இழ

 

        முத்தப் பருவம்

443

        இழியாக் குலத்தில் இசைஞானிப்
            பிராட்டி யாரை என்சிறுபுன்
        மொழியால் புகழ முடியுமோ
            முடியா தெவர்க்கும் முடியாதால்

என்ற பாடலாலும்,

        நீண்டசெஞ் சடையி னார்க்கு
            நினைப்பினால் கோயில் ஆக்கிப்
        பூண்டஅன் பிடைய றாத
            பூசலார் போற்றாள் போற்றி
        ஆண்டகை வளவர் கோமான்
            உலகுய்ய அளித்த செல்வப்
        பாண்டிமா தேவி யார்தம்
            பாதங்கள் பரவ லுற்றேன்

என்ற செய்யுலாலும் நன்கு உணரலாம்.                   

(44)

4.    எண்ணி இதுசெய் திடின்இதனால்
           எய்தப் படுவ திஃதெய்தா
       திரியப் படுவ திஃதுண்மை
           எய்தப் படலால் பயன்இன்றேல்
       நண்ணி யஅதை மறந்தொழிக
           நள்ளார் முனைமேல் இப்பொழுது
       நயந்து படர்ந்து பொருதுவமேல்
           நமதே ஆகும் நகுவாகை
       தண்ணி மயம்போல் புகழ்ப்போர்வை
           தாங்கற் காய கருமம் இது
       தப்பா தாற்றப் பொருள்வருவாய்
           தவாதுண் டாம்என் றிவைமுதலாம்
       கண்ணி வளவற் குரைத்தருள்செய்
           கனிவாய் முத்தம் தருகவே
       கனகக் குன்றை யனகசெழுங்
           கனிவாய் முத்தம் தருகவே