பக்கம் எண் :

New Page 1  

444

       முத்தப் பருவம்

    [அ. சொ,] எய்தப்படுவது - அடையப் பெறுவது, எய்தாது-அடையப் பெறாமல், இரியப்படுவது-சிதறுண்டு போவது, நண்ணிய-நெருங்கி, மேற்கொண்டுள்ள, நள்ளார்-பகைவர், முனைமேல் - பகைப்புலத்தின் மீது, படர்ந்து-சென்று, பொருதுவமேல்-சண்டை செய்தால், நகு-விளங்கும், வாகை-வெற்றி, ஆற்ற-செய்ய, தவாது-குறையாது, ஆர்ங்கண்ணி-ஆத்திமாலை, வளவற்கு - அனபாய சோழனுக்கு,

    விளக்கம்: இப்பாடலில்  சேக்கிழார் பெருமானார் தாம் அமைச்சராக இருந்தபோது, அநபாய சோழமகாராசர்க்கு அவ்வப்போது அறிவுறுத்தி வந்த திறனைக் காணலாம்.  மேலும், இப்பகுதியில் அமைச்சர்களின் கடமை இன்ன என்பதையும் ஈண்டே உணரலால்.  இப்பாடலில் திருக்குறட்பாக்களின் கருத்துக்கள் பலவும் பொதிந்துள்ளன.  திருக்குறள் பொருட்பாலில் அமைச்சர்க்கு எனப் பத்து அதிகாரங்கள் பகுத்துக் கூறப்பட்டுள்ளன.

    எண்ணி எண்ணி அரசர்க்கு இயம்பவேண்டிய கடன் அமைச்சர்க்கு உரியது.  இது குறித்தே வள்ளுவர்,

    “அறிகொன் றறியான் எனினும் உறுதி
     உழைஇருந்தான் கூறல் கடன்”

     கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
     அருவினையும் மாண்டது அமைச்சு

      வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
      ஐந்துடன் மாண்டது அமைச்சு

      பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
      பொருத்தலும் வல்லது அமைச்சு

என்றனர்.

    இவ்வாறு செய்வது அமைச்சர் கடமையே ஆகும்.  பழமொழி நாநூறு இதனை,

    உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்
    குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க்கு உறுத்தல்