வ
வீசு தென்றல்மணி
மண்ட பத்தரசு
வீற்றி
ருக்கும்முடி மன்னருக்கு
ஈசன் அன்பர்கள்
புராண மும்சொலி
அமைச்சும் ஆகிநலம்
எய்துமால்
என்றும்,
பாராட்டிப் பேசிய
காரணத்தால் ஈண்டுச் “சேவையர் குலசிகாமணி” ஆயினார் சேக்கிழார்.
இறைவன் சடை ஓர்
அடவி போன்றது. அதனால் அது சடாடவி எனப்படுகிறது. சடை அடவி சடாடவி ஆயிற்று. காட்டில்
பலபொருள்கள் செறிந்து காணப்படும். அதுபோல இறைவன் திருச்சடையில் பல பொருள்கள் விரவி
இருத்தலின், அது சடாடவி ஆயிற்று. சம்பந்தர்,
அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும் சடை
என்றும்,
வன்னி கொன்றை
மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை
என்றும்,
அப்பர் பெருமானார்
“புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும் சிற்றிடையாட்டும் செறிதரு கண்ணிக்கும்
சேர்விடமாம்” என்றும்,
அங்கண் கடுக்கைக்கும்
முல்லைப் புறவம் முறுவல்செய்யும்
பைங்கண் தலைக்குச்
சுடலைக் களரிப் பருமணிசேர்
கங்கைக்கு வேலை
அரவுக்குப் புற்றுக் கலைநிரம்பாத்
திங்கட்கு வானம் திருவொற்றி
யூரர் திருமுடியே
என்றும்,
போற்றியுள்ளமையின்,
ஈண்டுக் “கொன்றைச் சடாடவியர் எனப்பட்டார்,” இறைவர்.
|