இ
இறைவர் மன்று சிதம்பரம்.
அச்சிதம்பரத்தைப் பணிவதில் பேரார்வம் படைத்தவர் சேக்கிழார். இதனைத் தில்லைவாழ் அந்தணர்
புராணத்தைத் தொடங்கும்போதே,
ஆதியும் நடுவும்
ஆகி
அளவிலா
அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும்
ஆகித்
தோன்றிய
பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப்
பெண்ணுமாய்
ஆணும் ஆகி்ப்
போதியா நிற்கும்
தில்லைப்
பொதுநடம்
போற்றி போற்றி
என்றும்.
மூவரும் சென்று தில்லையை
வணங்கும்போது தாமே வணங்குவார் போன்று ஆர்வம் பொங்கப் பாடியதைப் பெரிய புராணத்துள் காணலாம்.
பெருமதில் சிறந்த
செம்பொன்மா ளிகைமின்
பிறங்குபேர்
அம்பல மேரு
வருமுறை வலம்கொண்
டிறைஞ்சிய பின்னர்
வணங்கிய மகிழ்வொடும்
புகுந்தார்
அருமறை முதலில்
நடுவினில் கடையில்
அன்பர்தம்
சிந்தையுள் அலர்ந்த
திருவளர் ஒளிசூழ்
திருச்சிற் றம்பலமுன்
திருஅணுக் கன்திருவாயில்
கையும் தலைமிசை
புனைஅஞ் சலியன
கண்ணும்
பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன
கரணங் களும்உடன்
உருகும் பரிவின
பேறெய்தும்
மெய்யும் தரைமிசை
விழுமுன் பெழுதரு
மின்தாழ்
சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம்
எதிர்க்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல்
அளவின்றால்
|