பக்கம் எண் :

நந

 

       வாரானைப் பருவம்

487

        நந்தி எம்பிரான் முதற்கண நாதர்கள்
            நலங்கொள்பன் முறைகூட
        அந்த மில்லவர் அணுகிமுன்
            தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்
        சிந்தை ஆர்வமும் பெருகிடச்
            சென்னியில் சிறியசெங் கையேற
        உய்ந்து வாழ்திரு நயனங்கள்
            களிகொள உருகும்அன் பொடுபுக்கார்

என்பன போன்ற பாடல்களைக் காண்க.

    இதனை உட்கொண்டே “மன்றைப் பராவிஎழு குன்றைப் பிரான்” எனப்பட்டார்.  மேலும் பெரிய புராணம் பாடச் சிதம்பரம் போந்தார் அல்லரோ இதனை,

        தில்லை எல்லையில் வந்து வந்துஎதிர்
            தெண்ட னாகவி ழுந்தெழுந்
        தல்லி சேர்கம லத்த டத்தினில்
            மூழ்கி அம்பல வாணர்முன்
        ஒல்லை சென்றுப ணிந்து கைத்தலம்
            உச்சி வைத்துளம் உருகிநைந்
        தெல்லை காணரி தாய போரொளி
            இன்ப வாரியில் மூழ்கியே

        அடைய லார்புரம் நீறெ ழத்திரு
            நகைசெய் தன்றொரு மூவரைப்
        படியின் மேல்அடி யைக்கொ ளும்பத
            பங்க யங்கள் பணிந்துநின்
        றடிகளே உனதடியர் சீர்அடி
            யேன்உ ணர்த்திட அடியெடுத்
        திடர்கெ டத்தரு வாய்எ னத்திரு
            அருனை எண்ணிஇ றைஞ்சினார்

உமாபதி சிவாசாரியார் பாடி இருத்தலாலும் உணரலாம்.

    உலகில் தொண்டே தலைசிறந்தது.  தொண்டு எனினும் சேவை எனினும்  ஒன்றே.   இந்த அரிய செயலைப் புரிந்து பெருமை கொள்பவர் சேவையர் எனவும்படுவர். இவர்களை வேளாளர் என்றும் கருதுவர்.   இவர்கள் தொண்டு நாட்டில்  இல்லை  ஆயின்,   நாடே  அழிந்து போகும்.  நாடு