பக்கம் எண் :

என

488

             வாரானைப் பருவம்

என்ற பெயர்க்கே இடம் இல்லாமல் போகும்.  இத்தகைய பெருமைகட்கு உரிய குலத்தில் பிறந்தவர் சேக்கிழார்.  அக்குலத்தில் பலர் பிறந்திருந்தாலும், அவர்கட்கெல்லாம் இவர் சிரோரத்தினமாய்த் திகழ்ந்தமையின், சேவையர் குல சிகாமணியாயினர்.

    தொண்டை  நாட்டினை  வளம்படுத்தி,   நாற்பத்தெண்ணாயிரத்து நற்குடிகளை இந்த நாட்டில் குடிபுகுமாறு செய்தவன் கரிகாற்சோழன்.  அக்குடிகளுள் ஒன்று சேக்கிழார் குடி.  கூடல்கிழான், புரிசைக்கிழான், வெண்குளப்பாக்கிழான் என்பார்களை ஒட்டிய குடிகள் சிறப்புடையன வாயினும், சேக்கிழான் குடிக்குள்ள பெருமை சிறப்பானதே ஆகும்.  கூடல், வெண்குளப்பாக்கம் என்ற இடப்பெயர்களை ஒட்டிக் குடிகள் எழலாயின.  ஆனால், சேக்கிழான் குடியோ வேளாளர்கட்குரிய இலச்சினை) இரடபக்குறியினை உரிமையாகக் கொண்டெழுந்த குடி என்ற காரணத்தாலும் சேக்கிழார் குடி சிறப்புக்குரியதாயிற்று.  இக் குடியின் சிறப்பைச் சேக்கிழார் பெருமானார் இக்குடியில் தோன்றி, அனபாயனுக்குத் தலைமை அமைச்சராகும் மாண்பினையும் பெற்று, பெரிய புராணம் எழுதும் பேறும் பெற்று, அம் மன்னனால் பல சிறப்புக்களையும் பெற்றமையினால் நாம் உணர்கின்றோம்.  அதன் பிறகே சேக்கிழார் குடிக்குத் தன்னேரில்லாச் சிறப்பு ஏற்பட்டது.  இதனை உமாபதி சிவனார் “குன்றத்தூரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றோ” என்றும்,

    நாடெங்கும்  சோழன்முனம் தெரிந்தே ஏற்றும்
        நற்குடிநாற் பத்தெண்ணா யிரத்துவந்த
    கூடல்கிழான் புரிசைகிழான் குலவு சீர்வெண்
        குளப்பாக்கி ழான்வரிசைக் குளத்து ழான்முன்
    தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச்
        சேக்கிழார் குடியில்இந்தத் தேசம் உய்யப்
    பாடல்புரி அருணெ்மாழித்தே வரும்பின் நந்தம்
        பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்

என்றும் பாடினர்.

(52)