பக்கம் எண் :

New Page 1

 

       வாரானைப் பருவம்

491

        மொய்பனிகூர் குளிர்வாடை
            முழுதுலவும் பொழுதேயாய்க்
        கொய்தளிர்மென் சோலைகளும்
            குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
        வெய்யவனும் கரம்நிமிர்க்க
            மாட்டான்போல் விசிம்பினிடை
        ஐதுவெயில் விரிப்பதுவும்
            அடங்குவதும் ஆகுமால்

என்று பாடியுள்ளார்.  இந்நிலையில் பனியின் கொடுமையிருக்குமானால் எவர்தாம் அதனை உவப்பர்.  ஆகவே, ஈண்டு “மதியும் பனியும் உவவா” என்று ஓதினர்.  ஆனால், எவரும் உள்ளம் உருகுவார் மதியினையும்  (அறிவினை)  அவர்  தம்  ஆனந்தக்  கண்ணீரையும் உவப்பர்.  அப்பர் பெருமானை  வணங்கும்  வணக்கப்  பாடலில்  சிவஞான  முனிவர்,

        இடையறாப் பேரன்பும் மழைவாரும்
            இணைவிழியும் உழவாரத்தின்
        படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
            திருவடிக்கே பதித்த நெஞ்சும்
        நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
            பெருந்தகைதன் ஞானப்பாடல்
        தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
            பொலிவழகும் துதித்து வாழ்வாம்

என்று துதித்து வணங்கினர்.

    இதனால் நெக்கு உருகுவார் மதியும்,  அத்தகையார்கன்  பனியும்  உவத்தல்  செய்ய என்பது உண்மை ஆதலைக் காணவும்.

    தாமரை மலர் செம்மை நிறமும் மணமும் உடைமை யோடு, வண்டுகள் மொய்க்கப் பெறும் தன்மையையுமுடையது.  இதுவே ஈண்டு உணர்த்தப்பட்டது.  ஈண்டுக் கோகனம் இரண்டு என்றது சேக்கிழார் பெருமானாரது திருவடிகளை என்க.