பக்கம் எண் :

மனுந

532

             வாரானைப் பருவம்

    மனுநீதிச் சோழன் மகனது கலைப் பயிற்சியைப் பற்றிக் கூறவந்த இடத்தும், சண்டேசுரர் கலைப் பயிற்சியைப்பற்றிச் சொல்லவந்த போதும், சேக்கிழார் எத்தகைய கல்வியினைக் கற்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து முறையே,

தவம்முயன் றரிதில் பெற்ற தனிஇளம் குமரன் நாளும்
சிவம்முயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி.

என்றும்,

        அலகில் கலையின் பொருட்கெல்லை
            ஆடும் கழலே எனக்கொண்ட
        செலவு மிகுந்த சிந்தையினில்
            தெளிந்தார் சிறிய பெருந்தகையார்

என்றும் பாடிக் காட்டினர்.

    இங்ஙனம் கற்காதவர்களையே “கற்றங் கமையார்” என்றனர்.  மலத் துன்பம் இன்னது என்பது முன்பே விளக்கப்பட்டது. ஆண்டுக் காண்க. அன்பர்கள் அரகர என்று எழுப்பும் ஒலி “மாமுழக்கு” என்பது,

வேதியர் வேத முழக்கொலி வேதத் தைத்தமிழால்
ஓதிய மூவர் திரும்பதி கத்தொலி ஒவாமல்
பூதி அணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்
காதியல் பேரொலி கால்ஒலி போல்ஒலி கைத்தேற

என்ற உமாபதி சிவனார் உரையால் உணர வருதல் காண்க.

    திருத்தொண்டர் சரித்திரம் காமர் வாய்ந்தது என்பதை இப்புராணத்தைக் கேட்கப் பலர் விரும்பி வந்ததையும், மண்ணவரே அன்றி விண்ணவரும் போற்றிப் புகழ்ந்தனர் என்பதையும் உமாபதி சிவசாரியார் நன்கு எடுத்து இயம்பியுள்ளனர்.

    கவசம் அணிந்த சனங்களும் இங்கித முங்கம்பித்
    தவச முறும்சிவ சிந்தையும் அன்பக லாமேன்மை
    தவச ரிதத்தொழி லும்சிவ சாதன முஞ்சாரச்
    சிவச மயத்தவர் யாவரும் வந்து திரண்டார்கள்