பூச
பூசிப் பவர்சிலர் பூசித் தன்பொடு புனிதன்தாள்
நேசிப் பவர்சிலர்
பிறவா வரம்அருள் நிமலாஎன்
றியாசிப் பவர்சிலர்
திருமுறை எழுதிக் களிகூர
வாசிப் பவர்சில
ராக இருந்து மகிழ்ந்தார்கள்
தெள்ளு திரைக்கடல்
மீது
மிதந்த திருத்தோணி
வள்ளலை அன்புசெய்
அன்பர்
மடங்கள் தொறும்பாலர்
மெள்ள இருந்து மிழற்று
புராண விருத்தத்தைக்
கிள்ளைகள் பாடி உரைப்பன
கேட்பன மெய்ப்பூவை
மற்றது கண்டு களித்த
நலத்த மனத்தோடு
சுற்றிய மந்திரி
மாரொடு தந்திரி மார்சூழத்
தெற்றென வந்து திரண்டு
முரண்தரு சீர்நாடு
பெற்றது செல்வம்
எனத்தனி யோகை பெருத்தார்கள்
பாடினர் தும்புரு நாரதர்
நீடிசை பாடாநின்
றாடினர் வானில் அரம்பையர்
அஞ்சலி எஞ்சாமல்
சூடினர் மண்ணின் மடந்தையர்
எந்தை துணைப்பாதம்
தேடினர் மாலயன் அன்பர்
நடந்தரி சித்தார்கள்
என்பன போன்ற பாடல்களால்
இவ்வுண்மையைத் தெளிக.
இத்தொண்டர் சரித்திரம்
அநபாய மன்னன் சீவக சிந்தாமணியில் ஈடுபட்டிருந்த நிலையினை மாற்றி வெற்றி கண்டது ஆதலின்
“கொற்றம் பொலியும் மழை” எனப் பட்டது. ஈண்டுத் திருத்தொண்டர் புராணமாம் மழை என்க.
திரு பிள்ளை அவர்கள்
ஐந்து பாடல்களில் சேக்கிழாரைக் கொண்டல் என்று உருவகப் படுத்திக் கூறியுள்ளனர். அவ்வுவமைப்
பொருத்தத்தைப் பொருத்திக் காட்டவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை அதற்கெனவே அமைத்துக்
|