த
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற்
கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே
என்றும் மொழிந்துள்ளமை
காண்க.
ஆகவே, இறைவன் “பாமசற்
குரு” எனப்பட்டான். இவனே எல்லாச் சந்தானங் கட்கும் முதல் .குரவன் ஆவான். இவனது அரும்பேற்றையும்
அனுக்கிரகத்தையும் சேக்கிழார் பெரிதும் பெற்றவர். இதனால்தான் “பேறு மேவிய அனுக்கிரகமும்
பெற்ற பெரியோன்” என்றனர்.
சேக்கிழார் இறைவனது அருளிப் பாட்டைப் பெற்றவர் என்பது பலபடி முன்னமே கூறப்பட்டது :
பிரகஸ்பதி, வியாழ
பகவான். அவர் தேவர்கட்குக் குரு. அதனால் தேவ குரு என்றும் கூறப்படுபவர். அவரைத் தேவர்கள்
பேணிப் போற்றுவர். பரஞ்சோதியார் இவரது பெருமையினைக் கூறும்போதும் தேவர்கள் குரு என்பதையும்
“பையரவு அணிந்த வேணிப் பகவனே அனைய தங்கள் ஐயனாம் வியாழப்புத்தேள்” என்றனர். தங்கள்
என்றது தேவர்களை ஆகும். சந்திரன் தேவ குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து புதன் என்பவனைப் பிள்ளையாகப் பெற்றான். இக்காரணத்தால் குருவின் நிக்கிரகத்தைப் பெற்றவனானான். அவரால்
வெறுக்கவும் பட்டவன் சந்திரன்.
பொன் செம்பொன்
என்றும், இரும்பு கரும் பொன் என்றும் கூறப்படுதல் மரபு. இதனால் பொன் என்ற பெயர் ஒற்றுமையால்
இரண்டும் ஒன்றுபோல் காணப்படினும், செம்பொன்னுக்குள்ள சிறப்பே பெரிது. இந்த உண்மையினை விண்
மண் ஆகிய இரு உலகங்களும் நன்கு உணரும். வீறு என்பதன் பொருள் பிற ஒன்றுக்கும் இல்லாத தனிச்
சிறப்பாகும். அதுபற்றியே இது பொன்னுக்கு அடையாக நிற்கிறது.
|