ர
ராம்
நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வாம்” என்றும் தாம் அடியரோடு உறவுகொண்டு உரைத்த
மொழிகளைக் கொண்டு உணரலாம். ஆகவே, அவரை ‘தண்மையுடையவரோடு உறவு கொள்ளும் இயல்பினான்’
என்றனர். தண்மையுடையவர்கள் பிறவியாம் கோடை நீங்கி, இறைவன் திருவடியாம் தண்ணடி சேர்ந்தவர்கள்.
சந்திரன் பன்னிரண்டு
ராசிகளிலும் சூரியனுடனும் தங்கித் தங்கி வருபவன். மேலும், அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும்
ஒன்றுபடுகிறார்கள் என்பது சோதிட மரபு. சோதிட நூல்படி கருதப் படுகின்ற பாபக் கிரஹங்களாகிய
சனி, இராகு, கேது ஆகிய கோள்களுடன் மதிஇருக்க நேரிடுகின்றது, சோதிட அமைப்பில் மேஷம், ரிஷபம்,
மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்னும்
பன்னிரண்டு ராசிகள் கூறப்படுகின்றன. இவ்ராசிகளில் ஒன்பது கிரகங்களும் உலாவி வருகின்றன.
அங்ஙனம் உலாவும்போது, சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாள் தங்கிச் செல்வதால்,
தீய கோள்களான சனி, ராகு, கேதுக்களையும் கூடும் வாய்ப்பு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. ஆக
இவனை “வெம்மையுடையவர்களோடு உறவு கொள்ளுவோன்” என்றனர்.
சேக்கிழார் ஒரே
தன்மையினர். அவரது வாழ்வில் குறைவு இல்லை. என்றும் நிறைவே உண்டு அவரை அரசரும் அந்தணரும்
போற்றிப் புகழ்ந்ததை முன்னரே பற்பல இடங்களில் கண்டோம். இதனால் அவரைக் குறைவற்றவர் ;
நிறைவுடையவர் என்பது புலனாகிறதன்றோ? சந்திரனுக்கு மாதந்தோறும் பதினைந்து நாள் வளர்ந்து நிறைதலும்,
பதினைந்து நாள் தேய்ந்து குறைதலும் இயல்பாக உள. இதனை கீழ் நடு மேல் என்னும் மூன்றுலகங்களும்
நன்கு அறியும். ஒரு தன்மையர் என்றனர். இதனைத் தேய்குவாய் என்ற அடியில் கூறினர். கிருபா
மூர்த்தியாவார் அருள் வடிவினரான சேக்கிழார். ஒருகால் ஒழிவாய் என்றது அடியோடு உருவின்றி
இருத்தலை என்க. அதுவே அமாவாசை நாள்,
|