New Page 1
மேல்கூறப்பட்ட குறைகள்
பல சந்திரனிடத்து இருந்தும், ஆடவா என்று அழைத்தது சேக்கிழாரது கருணையே ஆகும் என்க.
சேக்கிழார் கிருபாமூர்த்தி
என்பதும், முழுக் கருணையுடையார் என்பதும் அவர் வாக்கால் அறியவருகின்றன.
மறைத்தவன் புகுந்தபோது
மனம் அங்குவைத்ததத்தன்
இறைப்பொழு தின்கண் கூடி
வாளினால் எறியல் உற்றான்
நிறைந்தசெங்
குருதிசோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நபர்எனத் தடுத்து வீழ்ந்தார்
என்று மெய்ப்பொருள் நாயனார்
வாக்கில் வைத்துப் பாடியதையும், திருஞானசம்பந்தர் பையவே சென்று பாண்டியற்காகவே என்ற தொடர்க்கு
விளக்கம் கூறும்போது,
பாண்டிமா தேவியார்
தமதுபொற்பில்
பயிலும்நெடு மங்கலநாண்
பாதுகாத்தும்
ஆண்டகையார் குலச்சிறையார்
அன்பினாலும்
அரசன்பால் அபராதம்
உறுதலாலும்
மீண்டுசிவ நெறிஅடையும்
விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப்
புகலிவேந்தர்
தீண்டியிட பேறுடையன்
ஆதலாலும்
தீப்பிணியைப்
பையவே செல்க, என்றார்
என்று விளக்கி இருப்பதையும்
காணும்போது, சேக்கிழாரது கிருபையும் கருணையுமே இங்ஙனம் பாடச் செய்தது என்பதை அறிந்து
கொள்ளலாம்.
ஒரு சிலர் உள்ளத்தில்
பகை கொண்டு உதட்டில் நட்புக் கொண்டு உறவாடுவர், அவர்களைப் போன்றவர் அல்லர் நம் சேக்கிழார்
என்ற கருத்தில் “முழுக்கருணை” என்றனர்.
குன்றை நகர் சிறப்பைப்
பலபடி பாடும் திரு. பிள்ளை அவர்கள், இங்கு அம்மை அனையார் சேர்ந்திருக்கும் குன்றை என்றனர்.
“அம்மை” என்ற சொல்லைத் திறம்பட ஆண்டு சீரிய பொருள் அமையச் செய்த பெருமை திரு பிள்ளை
அவர்கட்கே உரியது. அம்மை என்பதன் பொருள் தாய் ஆகும். தாயின் பண்பு அன்பு, இரக்கம்,
கருணை முதலியன. இப்பண்பு தாய்மார்க்கு உண்டு என்பதை மணிமொழியார்,
|