பக்கம் எண் :

68

             காப்புப் பருவம்

நீராடாது சிவபூசை முடித்து யாவரும் சிவ கணமாக இருத்தலை உணர்ந்து இறைவன் திருவருளைப் போற்றினார்.  இவரை அப்பர்  “ தொண்டருக்கு ஆணி “  எனப் போற்றியுள்ளார்.  இவையே எழுவர் வரலாறு.  இவர்களின் தொண்டு சிறப்புடைமையின், “ அருத்தியின் கருத்திடை இருத்தி அவர் பதம் காதலித்துத் துதிப்பாம், “  எனப்பட்டது.

    “அப்பர முனிவன் கடிமலர் மென் சேவடிகள் கை தொழுது “   “ மிழலைக் குறும்பர் கழல் வணங்கி “    “ அம்மைகிளர் ஒளி மலர்த்தாள் போற்றி “ “ அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி “  “ திரு நீலநக்கர் தாள் வணங்கி “ என்று சேக்கிழாரும் இவர்களை வணங்கியதைக் காண்க.                        (4)

வம்பறா வரிவண்டு

5.   வம்பறா யாப்புநவில் வம்பறா முலையொரு
       மடக்கொடியை வேட்டல்இன்றி
   வண்பிரம சரியநிலை வைகுநா ளேஒரு
       மடப்பாவை யைப்பிறப்பித்
   தும்பல்தா வும்திறல் அரிக்குருளை போல்எழுந்
       துவகையார்க் கும்பிறப்பித்
   துலாயவர்முன் ஐவரைவெல் அறுவர்பொன் பாதமலர்
       உச்சிவைத் தேத்தெடுப்பாம்
   அம்பறா ஆழிமுழு துண்டதிரு முனிவிரித்
       தருளிய தமிழ்க்காக்கமா
   அருள்மூவர் அருள்மறைப் பொருள்தெரிய முன்ஒருவர்
       அருள்மறைப் பொருள்விளக்கும்
   நம்பறா வித்தியா ரணியமுனி வரன்உளம்
       நயப்பயாப் புறவிரித்த
   நாவலர் பிரானைத் திருக்குன்றை அருள்மொழி
       நலத்தனைக் காக்கஎன்றே.