பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

69

    [அ. சொ.]  வம்பறாயாப்பு என்பது, திரு தொண்டத் தொகையில் வம்பறாவரிவண்டு என்று தொடங்கபெறும் ஐந்தாவது பாடல்.  பாடல் - பாட்டு நவில் - கூறும், வம்பு - பாதர் தம் முலையினை அணைத்துக்கட்டும் கச்சு, அறா - நீங்கா, ஒரு - ஒப்பற்ற, மடக்கொடியை-இளைய பூங்கொடி போன்ற மாதினை, வேட்டல்-மணத்தல், வண்பிரம சாரியநிலை-வளமான பிரம்மச்சரிய நிலையில், வைகும் நாளே-வாழும் நாட்களிலேயே, பாவை-பதுமை போன்றஒரு பெண் குழந்தையை, உம்பல்-யானைமீது, அரிக்குருளை சிங்கக்குட்டி, உவகை மகிழ்ச்சி, உலாயவர்-இறைவன் உறைவிடங்கள் தோறும் சென்றுலாவியவராம் திருஞான சம்பந்தர், ஐவர்-ஐந்து இந்திரிய சேட்டைகளை, அறுவர்-திருஞான சம்பந்தர், கலிக்காமர், திருமூலர், தண்டி அடிகள், மூர்க்கர், சோமாசி மாறர் ஆகிய ஆறுஅடியார்கள், பொன்-அழகிய, ஏத்தெடுப்பாம்-போற்றித் துதிப்போம் அம்பு-நீர், ஆழி-கடல், திரு முனி-அழகிய அகத்திய முனிவர், ஆக்கம்-உயர்வு, அருள்மூவர்-அருளே வடிவாகக் கொண்ட அப்பர், சம்பந்தர், சுந்தரர் அருள் என்பதற்குத் திருவாய் மலர்ந்தருளிய என்று கூறினும் ஆம்.  மறை-வேதத்தின், நம்பு-அன்பு, வித்யாரண்யமுனி வரன்-வேதங்கட்கு விரிவுரை எழுதிய முனிவர், நம்பு-விருப்பம், நயப்ப-விரும்ப, யாப்பு-செய்யுள், அமைப்பு உற-பொருந்த, நாவலர் பிரான்-நாவன்மையுடைய தலைவராம் சேக்கிழார், அருண்மொழி நலத்தன்-அருண்மொழித் தேவன் என்னும் பெயரிய நன்மையுடைய சேக்கிழார்.

    [விளக்கம்] கடல் வற்றாத நீரையும் ஆழத்தையும் உடைமையின் வம்புஅறா எனப்பட்டது.  இந்திரன்விருத்திராசூரனைக் கொல்ல முனைந்தபோது, அவன் கடலில் ஒளிந்து கொள்ள, அந்நிலையில் இந்திரன் அகத்தியரை வேண்ட அவனது வேண்டுகோட்கிணங்கி, அகத்தியர் கடலைஉண்டனர்.  இக்குறிப்பே ஆழிமுழுதுண்ட திருமுனி எனப்பட்டது.  அகத்தியர்க்குப் பல சிறப்புக்கள் இருத்தலின், அவர் திருமுனி எனப்பட்டார்.  தமிழ்மொழி என்றும் உளமொழி, இதனைக்  “ கம்பர், என்றுமுள இன்தமிழ் “ என்றனர்.  இத்தகையதமிழ்ப்