அன
அன்றவர்கன்
மறைத்ததனுக்
களவிறந்த
கருணையராய்க்
கொன்றைநறும்
சடையார்தம்
கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம்
எனப்பதிகம்
எடுத்துடையான்
சீர்பாடப்
பின்றைவிடம்
போய்நீங்கிப்
பிள்ளைஉணர்ந்
தெழுந்திருந்தான்
என்று எடுத்து மொழிந்துள்ளார்.
திருஞான சம்பந்தரது
அருள் பண்பை அவர் கொல்லி மழவன் மகள் நோயால் வருந்துவதை அறிந்து இறைவனை நோக்கி,
துணிவளர் திங்கள்
துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை
சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர்
பாரிடம் சூழ
வாரிட மும்பலி
தேர்வர்
அணிவளர் கோலம்
எலாம் செய்து
பாச்சிலாச்
சிராமத் துறைகின்ற
மணிவளர் கண்டரோ
மங்கையை வாட
மயல்செய்
வதோஇவர் மாண்பே
என்று பாடி வேண்டி இந்நோயை
நீக்கியது கொண்டு தெளியலாம். இதனைச் சேக்கிழார்.
அணிகிளர் தாரவன்
சொன்ன மாற்றம்
அருளொடு கேட்டந்
நிலையில் நின்றே
பணிவளர் செஞ்சடைப்
பாச்சின் மேய
பரம்பொருள்
ஆயி னாரைப் பணிந்து
மணிவளர் கண்டரோ
மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர்
மாண்ப தென்று
தணிவில் பிணித
விர்க்கும் பதிகத்
தண்டமிழ்
பாடினார் சண்பை நாதர்
என்று மொழிந்துள்ளார்.
|