பக்கம் எண் :

தவத

 

       சிறுதேர்ப் பருவம்

795

    தவத்திரு நமசிவாயமூர்த்திகட்குப்பின் தவத்திரு உ மறைஞான தேசிகர் 3. தவத்திரு அம்பவாண தேசிகர், 4. தவத்திரு உருத்திரகோடி தேசிகர் 5. தவத்திரு வேலப்ப தேசிகர் 6. தவத்திரு குமாரசாமி தேசிகர் 7. தவத்திரு பிற்குமார தேசிகர், 8. தவத்திரு மாசிலாமணி தேசிகர் 9. தவத்திரு ராமலிங்க தேசிகர், 10. தவத்திரு வேலப்ப தேசிகர் 11. தவத்திரு பின் வேலப்பதேசிகர் 12. தவத்திரு திருச்சிற்றம்பல தேசிகர் 13. தவத்திரு அம்பலவாண தேசிகர் 14. தவத்திரு வேளூர் சுப்பிரமணிய தேசிகர் 15. தவத்திரு அம்பலவாண தேசிகர், (இவர்கள் காலத்தில்தான் மகாவித்துவானாகத் திரு.  மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் அமர்த்தப்பட்டார்.) 16.  மேலகரம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர், (16-வது குரு மகா சந்நிதானம் வரையில் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் நேரில் கண்டவர்கள் ஆதலின் அவர்களையே- “வழிவரும் நண்புனைதவர்” என்ற தொடரால் குறிப்பிட்டனர்.  அவர்கட்கு பின் வந்தவர்களை திரு. பிள்ளை அவர்கள் “இனி மேலும் வருபவர்” என்றனர்.) 17.  தவத்திரு அம்பலவாண தேசிகர் 18.  தவத்திரு சுப்பிரமணிய தேசிகர்,  19.  தவத்திரு வைத்தியலிங்க தேசிகர்.  20.  தவத்திரு அம்பலவாணதேசிகர்.

    இருபத்தோராவது குருமகா சந்நிதானமாக விளங்குபவரே இதுபோது சைவப் பயிர்தழையச் சைவ முகிலாய்த் திகழ்ந்து கொண்டு சிவராஜ தானியினை அருள் செங்கோல் கொண்டு, அருளாட்சி நடத்திக்கொண்டு திருமந்திர மாநாட்டினை ஆண்டுதோறும் நடத்தித் திருமந்திர உட்பொருளைப் பண்டிதர் முதல் பாமரர்வரை பேச்சாலும் எழுத்தாலும் உணரச்செய்து மெய்கண்டார் மாநாட்டைக் கூட்டிச் சிவஞான போதச் செல்வத்தை வழங்கி, புலவர் பெருமக்கட்குப் பெரும் பொருள்களை வாரிவழங்கி மூலபண்டாரமாகத் திகழ்பவராம் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பரமாசாரிய சுவாமிகள் ஆவார்.