New Page 1
வேத மோடந்தர துந்துபி
மீது முழங்கி
எழுந்தன
மாதவர் இந்திரர்
ஐயந்தரு
மாமலர் சிந்தி
வணங்கினர்.
என்றும் பாடி இருத்தலின்
விண்புகழும் நால்வர் என்றனர்.
நால்வர்கள் பாடிய
பாடல்கள் வேதமே ஆகும். வேதம் மந்திரங்களால் அமைந்தவை. மந்திரமாவது இன்னது என்பதைத் தொல்காப்பியர்
குறிப்பிடும்போது,
நிறைமொழி மாந்தர்
ஆணையில் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்
என்ப
என்று கூறியிருக்கின்றனர்.
நால்வரும் நிறை மொழி மாந்தர்கள் ஆதலினால்தான், அப்பர் தம் வாக்கால் பாம்பு கடித்திறந்த
அப்பூதியார் மகனை எழுப்பினர். சம்பந்தர் தம் திருவாக்கால் எழும்பைப் பெண்ணாக்கினார்.
சுந்தரர் தம் திருவாக்கால் முதலை யுண்டபாலனைவரவழைத்தனர். மணிமொழியார் தம் திருவாக்கால்
ஊமைப் பெண்ணைப் பேசவைத்தனர். இவர்கள் வாக்கு மகா மந்திரங்களாக இல்லை என்றால், இவ்வாறான
செயற்கரிய செயல்களைச் செய்திருக்க ஒண்ணுமோ? இதனால்தான், நாவ்லர் திருவாய் மலர்ந்தருள்
திராவிட வேதம் என்றனர்.
திருஞான சம்பந்தர்
வாக்கு இறைவன் வாக்கு என்பதைத் துறைமங்கல சிவப்பிரகாச சுவாமிகள், பெரிய நாயகி அம்மை நெடு
விருத்தத்தில்,
சுட்டுதற்கரிய உன்னை
மெய்ஞ்ஞான
சொரூபி என்று
அருமறை அனைத்தும்
சொல்லுவ துண்மை என்னநன்
குணர்ந்தேன்
சுரந்தநின் திருமுலைச்
செழும்பால்
வட்டிலில் கொச்சைப்
பிள்ளைமுன் உண்டு
வண்புகழ் ஞானசம்பந்த
வள்ளல்
என்றிடப் பேர் பெற்றரன்
மொழிபோல்
மையலில் செய்யுள்
செய்தமையால்
|