ஏர
ஏர்கெழும்
மார்பில் பொங்கும்
ஏந்திளம்
கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை
நீக்கும்
கவுணியர்
தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளில்
பூரித்
தடங்கிய அமுத
கும்பச்
சீர்கெழு முகிழைக்
காட்டும்
செவ்வியில்
திகழ்ந்து தோன்ற
காமவேள் என்னும்
வேடன்
உந்தியில்
கரந்து கொங்கை
நேமியம் புட்கள்
தம்மை
அகப்பட நேரி
தாய
தாமநீள் கண்ணி
சேர்த்த
சலாகைதூக்
கியதே போலும்
வாமமே கலைசூழ்
வல்லி
மருங்கின்மேல்
உரோம வல்லி
பிணிஅவிழ் மலர்மென்
கூந்தல்
பெண்அமு தனையாள்
செம்பொன்
அணிவளர் அல்குல்
தங்கள்
அரவுசெய் பிழையால்
அஞ்சி
மணிகிளர்
காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்கல்
ஆகிப்
பணிஉல காளும் சேடன்
பணம்விரித்
தடைதல் காட்ட
வரிமயில் அனைய
சாயல்
மங்கைபொன்
குறங்கின் மானம்
கரிஇளம்
பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு
காட்டத்
தெரிவுறும் அவர்க்கு
மென்மைச்
செழுமுழந் தாளின்
செவ்வி
புரிவுறு பொற்பந்
தென்னப்
பொலிந்தொளி
விளங்கிப் பொங்க
|