பக்கம் எண் :

பூவலர

 

       காப்புப் பருவம்

81

    பூவலர் நறுமென் கூந்தல்
        பொற்கொடி கணைக்கால் காமன்
    ஆவநா ழிகையே போலும்
        அழகினில் மேன்மை எய்த

    மேவிய செம்பொன் தட்டின்
        வனப்பினை மீதிட் டென்றும்
    ஓவியர்க் கெழுத ஓண்ணாப்
        பரட்டொளி ஒளிவுற் றோங்க

    கற்பகம் ஈன்ற செவ்விக்
        காமரு பவளச் சோதிப்
    பொற்றிரள் வயிரப் பத்திப்
        பூந்துணர் மலர்ந்த போலும்

    நற்பதம் பொலிவு காட்ட
        ஞாலமும் விசும்பும் எல்லாம்
    அற்புதம் எய்தத் தோன்றி
        அழகினுக் கணியாய் நின்றாள்

என்று பாடிக் காட்டினார்

    இதனால்தான் இவ்வம்மையார் ஒரு (ஒப்பற்ற)மடப்பாவை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனர்.

    திருஞான சம்பந்தர் அன்பர்க்கு எளியராகவும் வன்பர்க்கு வலியராகவும் விளங்கியவர்.  பரசமயகரிகட்கு இவர் அரியாக இருந்தவர்.  இவர் சிங்கமாக எங்கும் திரிந்ததைச் சேக்கிழார்,

    சீர்நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து
        சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
    சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
        சார்தலும்மற் றதுஅறிந்த சைவர் எல்லாம்
    ஆர்கலியின் கிளர்ச்சிஎனச் சங்கு தாரை
        அளவிறந்த பல்லியங்கள் முழங்கி ஆர்த்துப்
    பார்குலவு தனிக்கானம் சின்னம் எல்லாப்
        பரசமய கோளரிவந் தான்என் றூத

என்று பாடியுள்ளார்.