தம
தம்முயிர்க் குறுதி
எண்ணார்
தலைமகன்
வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி
நீதி
விடாதுநின்று
உரைக்கும் நீரர்
என்று கம்பராமாயணமும்
“ நன்னெறி
தருவதோர் நடுவு நீதியைச்
சொன்னவர்
அமைச்சர்கள் “ என்றும்
முற்றுற வருவதும்
முதலும் அன்னதால்
பெற்றிடு பயன்களும்
பிறவும் தூக்கியே
தெற்றன உணர்ந்துபி்ன்
பலவும் செய்வரால்
குற்றம்ஒன் றவர்வயின்
குறுக வல்லதோ
என்றும் கந்த புராணமும்,
அரசர் சீறுவ
ரேனும் அடியவர்
உரைசெ யாதொழி
யார்கள் உறுதியே
என்று கலிங்கத்துப்
பரணியும்,
மறந்தாம வேலான்
மனக்கொள்கைதம் நெஞ்சுள்
வான
நிறத்தாடி
நீழல் எனத்தோற்ற நிறுத்து மற்றது
அறத்தாறு எனில்
ஆற் றுவர்அன் றெனில் ஆக்கம் ஆவி
இறத்தான் வரினும்
மனத்தானும் இழைக்க எண்ணார்
என்று திருவிளையாடற்
புராணமும்,
செவிசுடச் சென்றாங்கு
இடித்தறிவு மூட்டி
வெகுளினும்
வாய்வெரீஇப் பேரா கவுண்மதத்த
கைம்மா வயத்தோ
பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே
அமைச்சு
என்று நீதிநெறி விளக்கமும்
அமைச்சர் இயல்புகளைக் கூறுதல் காண்க இப்பண்புகள் அனைத்தையும் பெற்றவர் அமைச்சர் சேக்கிழார்.
இவர்தாம் அமைச்சர் என்ற உண்மையினை முருகேசர் முதுநெறிவெண்பா என்னும் நூல்,
|