பக்கம் எண் :

என

94

             காப்புப் பருவம்

என்று எடுத்து மொழிந்ததோடு இன்றி, இவ்வுண்மையினை மேலும் விளக்கக் கருதி,

விண்ணவரிந் திரன்முதலோர் நாரத ராதி
    விளங்குசத்த ரிடிகள்கன வீணை வல்லோர்
எண்ணிய சித்தர்மனு வாதி வேந்தர்
    இருக்காதி மறைமுனிவர் எல்லாம் இந்தக்
கண்ணல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளம்
    கையின் நெல்லிக் கனிபோலக் காட்சி ஆகத்
திண்ணியநல் அறிவால்இச் சமயத் தன்றோ
    செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும்

செப்பரிய சமயநெறி எல்லாம் தந்தம்
    தெய்வமே தெய்வமெனும் செயற்கை யான
அப்பரிசா ளரும்அஃதே பிடித்தா லிப்பால்
    அடுத்த அந்நூல் களும்விரித்தே அனுமா னாதி
ஒப்பவிரித் துரைப்பர்இங்ஙன் பொய்மெய் என்ன

   
ஒன்றில்ஒன் றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி
    யாதுசமய மும்வணங்கும் இயப்ப தாகி

இயல்பென்றும் திரியாமல் இமயம் ஆதி
    எண்குணமும் காட்டிஅன்பால் இன்பம் ஆகிப்
பயன் அருளப் பொருள்கள்பரி வாரம் ஆகிப்
    பண்புறவும் சௌபான பட்சம் காட்டி
மயலறும்மந் திரம்சிட்சை சோதி டாதி
    மற்றங்க நூல்வணங்க மௌன மோலி
அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில்
    அமர்ந்ததுவை திகசைவம் அழகிது அந்தோ

அந்தோஈ ததிசயம் இச்சமயம் போலின்
    றறிஞர்எல்லாம் நடுவறிய அணிமா ஆதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
    வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
    இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை
சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்
    தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம்