சன
சன்மார்க்க ஞானமதில்
பொருளும் வீறு
சமயசங்கே தப்பொருளும்
தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினும்
கண்ட தில்லை
பகவர்வரிய தில்லைமன்றுள்
பார்த்த போதங்
என்மார்க்கம் இருக்குதெல்லாம்
வெளியே என்னா
எச்சமயத் தவர்களும்வந்
திறைஞ்சா நிற்பர்
கன்மார்க்க நெஞ்சமுள
எனக்கும் தானே
கண்டவுடன் ஆனந்தம்
காண்ட லாகும்
என்றும் பாடியுள்ளனர்.
சைவ எல்லப்ப நாவலரும் “சைவத்தின் மேற்சமயம் வேறில்அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல்தெய்வம்
இல்” என்று தெரிந்து செப்பினார், இதனால்தான் ஈண்டு “உயர் சைவம்” எனப்பட்டது. இத்தகைய
சமயத்தினிடம் ஈடுபட்டவர்களே சிறந்தவர்கள் ஆதலின் மாண்பினர்கள் என்றனர். சாக்கியர் சைவப்
பெருமக்களால் பெரிதும் போற்றப் பட்டவர். நக்கீரர் கோபப்பிரசாதம் என்னும் நூலில்,
கற்கொண் டெறிந்த
சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள்
தான்மிக அளித்தும்
என்றும்,
அப்பர் தம் தேவாரத்தில்
“ கல்லினால் எறிந்தே கஞ்சிதாம் உண்ணும் சாக்கியனார்” என்றும், சுந்தரர்
“வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கள் கழலே மறவாது கல் தெறிந்தசாக்கியர்” என்றும்
“நற்சாக்கியன்” என்றும்,
கல்லால் எறிந்த
பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த
அதனால்
அன்னவன் தனக்கும்
அருள்பிழைத் தின்றே
என்று பதினோராம் திருமுறைப்
பட்டினத்துப் பிள்ளையாரும் போற்றியுள்ளனர். இதனால்தான் “உயர் சைவ மாண்பினக்கள் தலை
வணங்கி வாயார வாழ்த்தி” எனப்பட்டது. சாக்
|