க
கியர் திருச்சங்க மங்கை
என்னும் ஊரில் பிறந்தவர். இதனைச் சேக்கிழார்,
தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்”
என்று பாடிக் காட்டினார்.
சங்கை மங்கை காஞ்சியம்பதிக்கு அருகில் உளது. இதனால் ஈண்டுச் சங்கை மங்கை வருசாக்கியர்
என்றனர்.
சாக்கிய நாயனார்
வேளாளர். காஞ்சிபுரத்தைச் சார்ந்த சங்கை மங்கையில் பிறந்தார். பிறப்பை ஒழிக்கச்
சாக்கியர் நூற்களை ஓதி உணர்ந்தார். அதனால் பயன் இல்லை என்று அறிந்தார். பின், ஈறில்
சிவ நன்னெறியே பொருளாவது என்று உணர்ந்தார். அதனோடு சைவ சமயத்தின் சிறந்த கொள்கைகளையும்
உணர்ந்தார். இதனைச் சேக்கிழார்,
செய்வினையும் செய்வானும்
அதன்பயனும்
கொடுப்பானும்
மெய்வகையான் நான்காகும்
விதித்தபொருள்
எனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக்
கில்லைஎன
உய்வகையால்
பொருள்சிவன்என்
றருளாலே உணர்ந்திருந்தார்
என்று மொழிந்துள்ளார்.
சாக்கியர் உயிர்களிடத்தில்
இரக்கம் உடையவர். சைவ நெறியில் புகுந்த இவர் பொளத்த கோலத்தை விட்டிலர். இவரிடம்,
சிவலிங்கம் கண்ட பின்பே உண்ணும் நியதி இருந்தது. ஒரு நாள் சிவலிங்கத்திற்குப் பூசை செய்ய
நேர்ந்தபோது, மலர் இல்லாமையினால் அருகிருந்த கல்லை எடுத்து, இறைவன் மீது இட்டுப் பூசித்தார்.
இதனைச் சேக்கிழார் மிக்க அன்புடன் “அல்லாதார் கல் என்பர் அரனார்க்கஃது அலராமால்” என
விளக்கிப் போந்தார். இவ்வாறே தினமும் பூசித்து இறைவர் அன்புக்கு உரியர் ஆனார்.
|