பக்கம் எண் :

101

  பொய்
 
205
வீரியமாய்ச் செய்வனெனல் அற்பரையே
    துதித்தல்பொய்யை வியந்து கொள்ளல்
சீரியரை இகழ்தல்பிறர் மீதொருவன்
    சொலும்பழியைச் செவியிற் கோடல்.
  உலகில், பொய் சொல்லல். பொய்சொல்ல நினைத்தல், பிறரைப் பொய் சொல்லப் பழக்குதல், ஒன்றைச் செய்வேன் எனக் கூறிச் செய்யாதொழிதல், முடியாச் செயலை முடிப்பேன் எனல், கீழோரைப் புகழ்தல், பொய்யைப் பாராட்டல், மேலோரை இகழ்தல், பழிச்சொற்களைக் கேட்டல்.
 

9

  உலகோர் ஒவ்வா துஞற்றுவ பொய்யே
206
தற்புகழ்தல் புறங்கூறன் மிகஇருணம்
    வாங்குதல்பொய்ச் சான்று ரைத்தல்
பற்பலவாக் கட்சாடை சிரகரகம்
    பிதஞ்செய்து பசுமை பொய்போற்
பிற்பயன்றோன் றிடச்செய்தன் மெய்யுரைக்க
    வஞ்சிவாய் பேசி டாமல்
சற்பனையா யிருத்தல்பொய்க் கதைகூறல்
    கேட்டலெலாஞ் சலங்க ளாமோ.
  தன்னையே புகழ்ந்து கொள்ளல், புறஞ் சொல்லுதல், அளவுக்கு மிஞ்சிக் கடன் வாங்குதல், பொய்ச்சான்று கூறல், கண் தலை கை முதலியவற்றால் (ஒப்புக்கொள்ளும் அடையாளமாகிய) சாடை செய்து உண்மையைப் பொய்போல் பயனிலதாக்கல், மெய்சொல்ல அஞ்சி ஊமைபோல் வஞ்சித்திருத்தல், பொய்க்கதை சொல்லல், கேட்டல் இவைகளெல்லாம் பெரும்பழி தரும் பொய்க்குற்றங்களாம்.
  இருணம்-கடன். சற்பனை-வஞ்சனை. சலம்-பொய்.
 

10

  ஆண்டவனுக்குக் கஞ்சாரே அறைவர் முழுப்பொய்
207
வியனுல கெங்கணும் வீற்றி ருக்குமோர்
வயமுளான் முனிவிற்கஞ் சாது மாக்கட்குப்
பயமொடு மநுத்தமே பகர்தல் தேவினும்
கயவுளார் நரனெனக் கருதல் போலுமே.