ஒன்று மில்லையடி அகப்பேய் உள்ள படியாச்சே நன்றில்லை தீதிலையே அகப்பேய் நாணமு மில்லையடி. | 44 |
| |
சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது சொன்னேனே எம்மாய மீதறியேன் அகப்பேய் என்னையுங் காணேனே. | 45 |
| |
கலைக ளேதுக்கடி அகப்பேய் கண்டார் நகையாரோ நிலைக ளேதுக்கடி அகப்பேய் நீயார் சொல்வாயே. | 46 |
| |
இந்த அமிர்தமடி அகப்பேய் இரவி விஷமோடி இந்து வெள்ளையடி அகப்பேய் இரவி சிவப்பாமே. | 47 |
| |
ஆணல பெண்ணலவே அகப்பேய் அக்கினி கண்டாயே தாணுவு மிப்படியே அகப்பேய் சற்குரு கண்டாயே. | 48 |
| |
என்ன படித்தாலும் அகப்பேய் எம்முரை யாகாதே சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு. | 49 |
| |
காடு மலையுமடி அகப்பேய் கடுந்தவ மானாலென் வீடும் வெளியாமோ அகப்பேய் மெய்யாக வேண்டாமோ. | 50 |
| |
பரத்தில் சென்றாலும் அகப்பேய் பாரிலே மீளுமடி | |