நித்திரை கெட்டு நினைவோ டிருப்போர்க்கு முத்திரை யேதுக்கடி குதம்பாய் முத்திரை யேதுக்கடி. | 220 |
| |
தந்திர மான தலந்தனில் நிற்போர்க்கு மந்திர மேதுக்கடி குதம்பாய் மந்திர மேதுக்கடி. | 221 |
| |
சத்தியமான தவத்தி லிருப்போர்க்கு உத்திய மேதுக்கடி குதம்பாய் உத்திய மேதுக்கடி. | 222 |
| |
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்க ளேதுக்கடி குதம்பாய் வாட்டங்க ளேதுக்கடி. | 223 |
| |
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு சத்தங்க ளேதுக்கடி குதம்பாய் சத்தங்க ளேதுக்கடி. | 224 |
| |
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோருக்கு இச்சிப்பிங் கேதுக்கடி குதம்பாய் இச்சிப்பிங் கேதுக்கடி. | 225 |
| |
வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு மோகாந்த மேதுக்கடி குதம்பாய் மோகாந்த மேதுக்கடி. | 226 |
| |
சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு ஏகாந்த மேதுக்கடி குதம்பாய் ஏகாந்த மேதுக்கடி. | 227 |
| |
அந்தரந் தன்னி லசைந்தாடு முத்தர்க்குத் தந்திர மேதுக்கடி குதம்பாய் தந்திர மேதுக்கடி. | 228 |
| |
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு ஞானந்தா னேதுக்கடி குதம்பாய் ஞானந்தா னேதுக்கடி. | 229 |