கைவ்வடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர் எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர் பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல் மெய்கடந்த தும்முளே விரைந்து கூடலாகுமே. | 52 |
| | |
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல் மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே. | 53 |
| | |
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன் இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ. | 54 |
| | |
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல் ஆழியோனும் ஈசனும் அமர்ந்துவாழ்ந் திருந்திடும் ஏறில்ஏறும் ஈசனும் இயங்குசக்ர தரனையும் வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே. | 55 |
| | |
தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன் எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன் பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார் வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே. | 56 |
| | |
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான் முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர் சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின் அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே. | 57 |
| | |
உற்றநூல்க ளும்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர் செற்றமாவை உள்ளரைச் செறுக்கறுத்து இருத்திடில் சுற்றமாக உம்முளே சோதியென்றும் வாழுமே. | 58 |
| | |
போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும் தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் | |