8. அழுகணிச் சித்தர் பாடல் அழுத கண்ணீருடன் காணப்பட்ட சித்தர் அல்லது இவரது பாடல்களைப் படிக்கும்தோறும் அழுகை உணர்ச்சி உண்டாவதால் ‘அழுகண்’ சித்தர் எனப்பட்டார் போலும். இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத் தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான் விளக்கிங்கொள்ள முடியும். இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை முன்னிலைப்படுத்துவனவாகவே உள்ளன. “ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா உன் பாதம் சேரேனே? இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு |