அன்பர் கோயில்காணலாம் அகலும் எண்டிசைக்குளே தும்பியோடி ஓடியே சொல்லடா சுவாமியே. | 89 |
| | |
தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. | 90 |
| | |
உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர் உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே. | 91 |
| | |
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு மாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும்உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. | 92 |
| | |
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்க ளாவது மறத்திலூற லன்றுகாண் மந்திரங்க ளாவது மதத்தெழுந்த வாயுவை மந்திரத்தை உண்டவர்க்கு மானமேதும் இல்லையோ. | 93 |
| | |
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே. | 94 |
| | |
ஆலவித்தில் ஆல்ஓடுங்கி ஆலமான வாறுபோல் வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர் ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்ததே பாருமித்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே. | 95 |
| | |
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் அவ்வுமுவ்வும் அவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. | 96 |