ஆதியானது ஒன்றுமே அனேகஅனேக ரூபமாய் சாதிபேத மாய்எழுந்து சர்வசீவ னானபின் ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமந்த சென்மமாம் சோதியான ஞானியர்க்குச் சுத்தமாய் இருப்பரே. | 112 |
| | |
மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் மலர்ந்தபூ மயக்கம்வந்து அடுத்ததும் விடுத்ததும் புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும் இலங்கலங்கி நின்றமாயம் என்னமாய ஈசனே. | 113 |
| | |
பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும் ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர் ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே. | 114 |
| | |
தலயாத்திரை நீக்கல் மண்கிடார மேசுமந்து மலையுளேறி மறுகுறீர் எண்படாத காரியங்கள் இயலுமென்று கூறுகிறீர் தம்பிரானை நாள்கடோறுந் தரையிலே தலைபடக் கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே. | 115 |
| | |
நாவிதூ ளழிந்ததும் நலங்குலம் அழிந்ததும் மேவுதேர் அழிந்ததும் விசாரமுங் குறைந்ததும் பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய் ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார். | 116 |
| | |
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமா மாடுமக்கள் பெண்டீர்சுற்றம் என்றிருக்கு மாந்தர்காள் நாடுபெற்ற நண்பர்கையில் ஓலைவந்து அழைத்தபோது ஆடுபெற்ற தவ்விலை பெறாதுகாணும் இவ்வுடல். | 117 |
| | |
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே. | 118 |