ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும் பானமதை யுண்டு பசியினால் - ஞானமது கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும் உண்டால் அமிர்தரச முண் | 11 |
| |
சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன வழியறியார்க்கென்ன எய்துமாறு - சுழியறியா மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன் காலன்வர்க் கேமரணங் காண் | 12 |
| |
வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில் நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை நாலு பொருளுள் நற்பொருளின் ஆறறியப் பாலுமது நெய்யெனவும் பார் | 13 |
| |
முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப் பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு | 14 |
| |
காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின் மாயசித்தி மூலச்சுழி வாய்க்குமே - காயசித்தி மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக் காலமென்னி ரண்டாண்டில் காண் | 15 |
| |
கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும் உள்ள மதிலுண்டென்றே உன் | 16 |
| |
என்றும்இந் துப்பாகும் எண்சாணுடலிருக்கக் கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின் வீரியமா யானுணரு மெய் | 17 |
| |
உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால் மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால் | |